கணவருடன் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை! அதன்பின் நேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

 
rape rape

ராமேஸ்வரத்தில் கணவருடன் நடந்து  சென்ற பெண்ணை கணவரை தாக்கி விட்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape


ராமேஸ்வரம் அடுத்த மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த  மரியமலர் பிளாடின் (வயது 46), இவரது கணவர் ஜோசப் ஆரோக்கியம். இவர்கள் இருவரும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளனர். இதையடுத்து சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் ஜோசப் ஆரோக்கியத்தை தள்ளிவிட்டு  மரியமலர் பிளாடினை தனியாக  அழைத்து சென்று பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அலறடித்துக் கொண்டு நான்கு பேரிடமிருந்து தப்பித்து ஓடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நான்கு இளைஞர்களிடம் இருந்து தப்பித்து வந்த இளம் பெண்ணுக்கு சிறிது நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற போலீசார் நான்கு பேரில் ஒருவரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.