நிர்வாண நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சடலம்!

 
death

கும்மிடிப்பூண்டி அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் நிர்வாண நிலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் நிர்வாண நிலையில் கிடைத்த பெண் ஊராட்சித் தலைவர் சடலம்: என்ன  நடந்தது? - BBC News தமிழ்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் பெண் சடலம் ஒன்று ஆடைகள் இன்றி உடலின் பல இடங்களில் ரத்த காயங்களுடன் கிடப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிர்வாண நிலையில் கிடந்த சடலத்தின் மீது போர்வையை மூடி விசாரணையில் ஈடுபட்டனர். முகம், உடல், தலை என பல்வேறு இடங்களில் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அருகில் பெண் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

தொடர்ந்து சுமார் 30 வயது மதிக்கப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலின் முகம், காது என பல இடங்களில் ரத்த காயங்கள் உள்ளதாலும் உடல் முழுவதும் ஆடை இல்லாமல் இருப்பதாலும் இறந்து கிடக்கும் பெண் உல்லாசத்திற்காக அழைத்து வரப்பட்டு பின் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போன பெண் தொடர்பாக வந்துள்ள புகார்களின் அடைப்படையில் சடலத்தை அடையாளம் காணும் பணியிலும் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். நிர்வாண நிலையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.