மதுபோதையில் தினமும் தகராறு செய்த கணவனை மர்ம உறுப்பில் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, மதுபோதையில் தினமும் தகராறு செய்து வந்த கணவனை, ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் மர்ம உறுப்பில் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்துார் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மணி (34). இவர் அட்டை மில்லில் லோடுமேனாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி திவ்ய பாரதி (28). கார்மெண்ட்ஸ் டெய்லராக பணி புரிந்து வருகிறார். இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணி, மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திவ்யபாரதி கணவரின் மர்ம உறுப்பு மற்றும் தலையில் கத்தியால் கொடூரமாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் வலியில் துடிதுடித்த மணியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். போலீசார் திவ்யபாரதியை கைது செய்தனர். அவரிடம் சாத்துார் தாலுகா போலீசார் விசாரித்துவருகின்றனர்.

