3 மாத ஆண் குழந்தையை கிணற்றில் தூக்கி வீசி கொன்ற தந்தை- அதிர்ச்சியளிக்கும் காரணம்

 
s

குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஷிஷ் பூரியா, அவரது மனைவி ஹினாபென். இவர்களுக்கு லவியான்ஷ் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளார். சம்பவத்தன்று, ஹினாபென், தனது மூன்று மாத மகனான லவியான்ஷைக் குளிப்பாட்டி கட்டிலில் தூங்க வைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ​​ஆஷிஷுக்கும் ஹினாபெனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று பல பேருடன் கைபேசியில் பேசியதால் ஆஷிஷ் கோபமடைந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது, ​​அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாகவும், இது யாருக்கு பிறந்த குழந்தை என கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால், ஆஷிஷ் குழந்தையைத் தூக்கி அருகிலிருந்த கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது. குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.