மாணவி வர மறுத்ததால் அவரின் ஆபாச படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய வாலிபர்

 
x

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வாலிபர் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார் .  ஒரு கட்டத்தில் அந்த வாலிபரின் தொந்தரவு தாங்காமல் அந்த பெண் அவரின் அழைப்பை ஏற்க மறுத்து விட வர மறுத்து விட்டதால் ஆத்திரத்தில் பெண்ணின் ஆபாச படங்களை அவரின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்ப,  பெண் போலீசில் புகார் அளிக்க, வாலிபரை  கைது மூணாறு போலீசார் கைது செய்துள்ளனர் .

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஷ்ர்தா பகுதி.  இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் நாயக்.   32 வயதான இந்த வாலிபர் மூணாறு அடுத்த மாங்குளம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் வேலை செய்து வந்திருக்கிறார்.   அதே பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினருடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது .

s

அந்த குடும்பத்தில் உள்ள மாணவியிடம் நெருங்கி பழகி பின்னர் அவரிடம் ஆசை வார்த்தைகள் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  கடந்த 2018 ஆம் ஆண்டில் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜ்குமார் அதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் . அதை தனது லேப்டாப்பில் வைத்துக் கொண்டு,  அதை அந்த மாணவியிடம் அடிக்கடி காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

அந்த மாணவி அதன் பின்னர் படிப்பு முடிந்து வீட்டில் இருந்தபோதும் அந்த இளம் பெண்ணுக்கு 2022 ஆம் ஆண்டு வரைக்கும் இப்படி தொடர்ந்து தொல்லை தந்து வந்திருக்கிறார்.  அதற்கு மேலும் ராஜ்குமாரின் தொல்லையை தாங்க முடியாத அந்த பெண் அவரின் தொடர்பிலிருந்து விலகி இருக்கிறார். 

 தொடர்ந்து அந்த பெண்ணுக்கு போன் செய்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   தன்னுடன் உறவு கொள்ள அழைத்திருக்கிறார் .  அதற்கு அந்த பெண் மறுத்து  அவர் செய்த போனையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார்,  தான் லேப்டாப்பில் சேமித்து வைத்திருந்த அந்தப் பெண்ணின் ஆபாச படங்களை அவரின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்.  

 இதனால் பெரும் பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார் அந்த பெண் .  இதற்கு மேலும் பொறுமை காக்க கூடாது என்று மூணாறு போலீசில் அந்த பெண் ராஜ்குமார் மீது புகார் அளித்திருக்கிறார் .  இது தெரிந்ததும் ராஜ் குமார் ஓடிஸாவுக்கு தப்பி சென்றிருக்கிறார் .  மூணாறு இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஒடிசா சென்றார்கள்.  அங்கு மாநிலத்தில் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் ராஜ்குமாரை கைது செய்து நேற்று மூணாறுக்கு அழைத்து  வந்து இருக்கிறார்கள்.   மூணாறில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.