நினைக்கும் போதெல்லாம் மாணவிகளை ஓட்டலுக்கு அழைத்து.. ஐந்து ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

 
ல்

 ஐந்து மாணவிகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் அந்த ஆசிரியர்.  நினைக்கும் போதெல்லாம் அந்த மாணவிகளை ஹோட்டல் அறைக்கு வர வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.  அந்த ஓட்டலின் மேனேஜரும் மாணவிகளுக்க்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.  இதற்கு ஆசிரியரின் மனைவி உடந்தையாக இருந்திருக்கிறார்.

 பீகார் மாநிலத்தில் லக்கி சராய்  பகுதியில் வசித்து வருபவர் அமீத் குமார்.  தனியார் பள்ளியில் இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.   வீட்டிலேயே மாணவிகளுக்கு டியூசன் வகுப்பு எடுத்து வருகிறார்.   அப்பகுதியில் உள்ள மாணவிகள்,  ஆசிரியர் பணி புரியும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரும் அவரின் வீட்டிற்கு வந்து டியூஷன் படித்து சென்று இருக்கிறார்கள்.

இ

 அப்போது சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.  அதை வீடியோவாக போட்டோவாக எடுத்து வைத்துக்கொண்டு  அதை காட்டி மிரட்டி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   அந்த ஆசிரியரின் மனைவி சாகிபா குமாரி இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.

 ஒரு கட்டத்திற்கு மேல் இந்த மாணவிகளை மிரட்டி ஹோட்டல் அறைக்கு வர வைத்திருக்கிறார்.  இதற்காக சரயுக் என்கிற ஓட்டலை நிரந்தரமாக பேசி வைத்திருக்கிறார் அந்த ஆசிரியர்.  அந்த ஓட்டலின் மேனேஜர் வினோத் குமார் யுத்தா ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்வதை எல்லாம் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார். இதை காட்டி விரட்டி அவரும் மாணவிகளுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார் . 

இப்படியே இந்த தொல்லை ஐந்து வருடமாக இருந்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவிகளில்  இரண்டு பேர் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வீட்டில் சொல்லி அழுது இருக்கிறார்கள்.  இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளிக்க,  போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர், அவரது மனைவி , ஹோட்டல் மேனேஜர் 3 பேரையும் கைது செய்துள்ளனர் . அவர்களிடம் இருந்த மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.