மாதம் ரூ.10,000 வைத்து குடும்பம் நடத்த முடியல... மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற ஆசிரியர்

 
s

அசாமில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.


அஸ்ஸாமின் தேமாஜி மாவட்டம் ஜோனாய் நகரின் தெலம் பஜாரில் வசித்துவருபவர் ஆசிரியர். இவர் கம்சுக் தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி சினுவாரா பேகம் (33). இவர்களுக்கு ஷகீல் அலி (8) மற்றும் ஐந்து வயது ரிஜிகா பேகம் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த ஆசிரியர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது

 அவர்களது வீட்டில் நடந்த இந்தத் தாக்குதலில், அந்த நபரின் 13 வயது மூத்த மகள் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். நிதி நெருக்கடி காரணமாகவே இந்தச் செயலைச் செய்ததாகவும், தனக்கு மாதம் ரூ.10,000 சம்பளம் கிடைப்பதாகவும் அந்தப் பள்ளி ஆசிரியர் கூறியுள்ளார். தடயவியல் குழுவினர் அவரது இல்லத்தில் இருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  மேலும் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.