பொறியியல் மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்த காதல் ஜோடி

பண நெருக்கடியில் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவிகளை குறிவைத்து அவர்களுக்கு பண உதவி செய்து மூளைச்சலைவை செய்து பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த காதல் ஜோடியில் தற்போது ஒருவர் போலீசில் சிக்கி இருக்கிறார். ஒருவர் தலைமறைவாக இருக்கிறார். மாணவிகளை பாலியல் தொழிலில் வளைப்பதற்காகவே தனது காதலியை பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறார் அந்த வாலிபர்.
சென்னை எழும்பூரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் அந்த தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் நடத்துவதாக சொல்லி ஆண்களை வர வைத்து அவர்களிடம் அதிக அளவு பணம் கேட்டு மிரட்டுவதாக பெரியமேடு காவல் நிலையத்திற்கு புகார் சென்று இருக்கிறது. இதனால் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது ஜெயப்பிரதா என்கிற மாணவி கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார் .
அவரின் செல்போனை வாங்கி பார்த்த போது ஜிபே போன்ற பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது பல லட்ச ரூபாய் பண பரிவர்த்தனை செய்திருப்பதை கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
12 ஆம் வகுப்பு படித்த ஜெயபிரதா சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் தரகர் பிரகாஷை காதலித்து வந்திருக்கிறார். பாலியல் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பிரகாஷ் ஜெயப்பிரதாவிற்கு ஆசை காட்டி இருக்கிறார். இதனால் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஜெயப்ரதாவை சென்னையில் பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டிருக்கிறார். அங்கு மாணவிகளிடம் நட்பாக பழகி பண தேவை இருக்கும் மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு கடன் கொடுத்து வாங்கி கொடுத்து, கடனை அடைக்க முடியாத நிலை வரும் போது மேலும் அதிகமாக பணம் கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டால் இதே மாதிரி அதிகம் சம்பாதிக்கலாம் என்று மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள்.
தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர நகரங்களில் கல்லூரி மாணவிகளை பாலியல் ஆசைக்காக தேடுவதை அறிந்து அவர்களிடம் மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார்கள். இதற்காக சொகுசு வீடு , தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்திருக்கிறார்கள்.
லோகாண்டோ இணையதளம் மற்றும் செயலி மூலம் விளம்பரப்படுத்தி பொறியியல் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார். பாக்கெட் மணி , அதிக அளவு பணம் , சுற்றுலா செல்வது, பெரிய மனிதர்களின் தொடர்பு என்று பல்வேறு விதமான ஆசைகளில் விழுந்த மாணவிகள் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி தந்திருக்கிறார்கள்.
பாக்கெட் மணிக்காகவும் , படிக்கும்போதே உல்லாசமாக இருக்கலாம் என்று நினைக்கும் மாணவிகளை குறிவைத்து தொழிலதிபர்களுக்கு அனுப்பி 30 ஆயிரம் 40 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு மாணவிகளுக்கு வெறும் 3000 பணத்தை கொடுத்து இந்த காதல் ஜோடி மோசடி செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஜெயப்பிரதா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரின் காதலன் பிரகாஷ் கூட்டாளி பிரேம் தாஸ் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பிரகாஷ் தலைமறைவாக இருந்து வருகிறார். தரகரும் ஜெயப்பிரதாவின் காதலனும் ஆன பிரகாசை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளனர்.