மகன் கண் எதிரிலேயே மனைவியை குத்திக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள்

மகன் கண் எதிரிலேயே மனைவியை குத்திக் கொலை செய்திருக்கிறார் அந்த காவலர் . தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் வனஸ்தலிபுரம் என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் போலீஸ் கான்ஸ்டபிள். உயர் நீதிமன்றத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் ராஜ்குமார் .
ராஜ்குமாருக்கு சோபனா என்ற மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான ராஜ்குமாருக்கும் ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்திருக்கிறது. இதில் ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கணவருடன் சண்டை போட்டு விவாகரத்து கேட்டு வந்திருக்கிறார் ஷோபனா .
இந்த விவகாரத்தில் இரு விட்டாரும் தலையிட்டு இருவரையும் வைத்து பேசி சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் ராஜ்குமார் தன் மனைவியை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். இதனால் சோபனாவின் சகோதரர், ராஜ்குமார் வேலை செய்யும் இடத்திற்கே சென்று தன் தங்கைக்காக தட்டி கேட்டிருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் வீட்டிற்கு வந்ததும் மனைவி ஷோபனாவிடம் அதை கேட்டு சண்டை போட்டு இருக்கிறார். அவரை அடிக்கவும் செய்து இருக்கிறார்.
அப்போது 15 வயது மகனும் வீட்டில் இருந்திருக்கிறார். தந்தை அம்மாவை அடிப்பதை பார்த்து மகன் தடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனாலும் ராஜ்குமார் ஆவேசத்தில் மகனை தள்ளிவிட்டு மனைவியை அடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கணவரின் ஆவேசத்தை பார்த்து பயந்து போன சோபனா , வீட்டிலிருந்து தப்பி ஓட முயற்சித்திருக்கிறார் . ஆனாலும் ராஜ்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்து இருக்கிறார்.
இதை பார்த்து ஓடி வந்து தடுக்க வந்த மகனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருக்கிறது. கழுத்தை அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சடலமாக கிடந்திருக்கிறார் ஷோபனா . இதை பார்த்ததும் அங்கிருந்து கத்தியோடு தலைமறைவாகி இருக்கிறார் ராஜ்குமார்.
தன் தாய் சடலமாக கிடப்பதை போலீசாருக்கு தகவல் சொல்லி இருக்கிறார் மகன் . போலீசார் வந்து ஷோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். சோபனாவின் மகன் அளித்த சாட்சியத்தின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகுமாரை கைது செய்ய தேடி வருகின்றார்கள்.