பிளஸ் டூ மாணவி என்றால் மைனர் என்று முடிவு செய்துவிடுவதா? நீதிபதி காட்டம்

 
f

பிளஸ் டூ மாணவி என்றதுமே மைனர் என்று முடிவு செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விடுவதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் நீதிபதி.

 டெல்லியில் சுல்தான் பூரி பகுதியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் இருக்கிறார்.   இதை அடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர் .  இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்துள்ளார்கள். மாணவி இருக்கும் இடத்தை சில நாட்களுக்குப் பின்னர் தான் போலீசார் கண்டறிந்தனர். 

gil

 இந்த மாணவியை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.   இந்த மாணவியை அழைத்துச் சென்று திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பான வழக்கு தொடர் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.   மாணவியின் சம்மதத்தோடு தான் இருவருக்கும் உடலுறவு ஏற்பட்டது என்றும்,  போக்சோ வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்றும்,  மாணவி சிறுமி இல்லை என்றும் இளைஞர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 இந்த மனு  டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ரஜினி என்பதாக விசாரணைக்கு வந்தது . இந்த மனுவை விசாரித்த நீதிபதி போலீசாரிடம் அந்த பெண் மைனர் தானா எந்த அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து உள்ளீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

 அதற்கு  போலீசார் சிறப்பு வழக்கறிஞர்,   மாணவி பிளஸ் டூ வகுப்பு என்பதால் மைனராகத் தான் இருப்பார் என்று யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விட்டோம் என்று கூறி இருக்கிறார் .  இதை கேட்டதும் நீதிபதி,  யூகத்தின் அடிப்படையில் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.  இது தவறான விஷயம் இது அதற்கு உரிய ஆவணங்களை முறையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

 வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று  கூறப்பட்டிருக்கிறது.