குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

 
y

இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  குடும்ப பிரச்சனையால் இந்த அதிர்ச்சி சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.

 நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி.  இவரின் மனைவி குணவதி.  இத்தம்பதிக்கு பிரனேஷ் என்கிற ஐந்து வயதில் ஒரு மகனும்,  சுஜித் என்று இரண்டு வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர்.   கோபி தான் வசித்து வரும் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் .  

p

குடும்ப பிரச்சனையில் குணவதிக்கும்  அவரின் தந்தை கேசவனுக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது.  இதில் ஆத்திரம் அடைந்த குணவதி இரண்டு குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசி கொலை செய்திருக்கிறார்.  பின்னர் அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். 

இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு மகளும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில்,  சோகத்தில் தந்தை கேசவன் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் .