காய்கறி வாங்க வந்த பெண்ணின் இடுப்பை படம் பிடித்த காமவெறியன்! சென்னையில் நடக்கும் கொடூரம்
சென்னையில் காய்கறி வாங்க வந்த பெண்ணின் இடுப்பை படம் பிடித்த காமவெறியனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவனை போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், தனது கணவர் மற்றும் மகனுடன் காளிகாம்பாள் கோவில் சென்று விட்டு, மண்ணடி ராமசாமி தெரு சந்திப்பில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நின்ற ஒரு நபர் பெண்ணின் இடுப்பை செல்போனில் படம் எடுத்துள்ளார். இதை அப்பெண்ணின் மகன் பார்த்துவிட்டு சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபர் மண்ணடியை சேர்ந்த ஹார்டுவேர் கடை உரிமையாளர் சபீர் (வயது 52) என்பதும், இரண்டு மகள்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.அவர் மீது BNS 77- ஒரு பெண்ணை தவறான நோக்கத்துடன் பார்ப்பது அல்லது படம் பிடிப்பது என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


