“உன்ன நம்பிதான வந்தேன்”- அலறிய இளைஞர்! மிளகாய் பொடி தூவி ஓட, ஓட விரட்டி கொலை செய்த கள்ளக்காதலி

குமரி மாவட்டம் தென்தாமரை குளம் அருகே கப்பல் ஊழியரும் பிரபல ரவுடியுமான காதலன் மீது மிளகாய் பொடி தூவி ஓட, ஓட விரட்டி கொலை செய்த கள்ளக்காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கள்ளக்காதலியையும் அவர் கணவனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
குமரி மாவட்டம் தென்தாமரை குளம் அருகே அகஸ்தீஸ்வரத்தை அடுத்த கருங்குளத்தான்விளையை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (வயது 37), முன்னாள் கப்பல் ஊழியர் மற்றும் அப்பகுதி ரவுடியும் ஆவார். இவர் தற்போது சொந்த ஊரில் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் பெண் ஜான்சி என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் இருந்து பரமேஷ்வரன் அடிக்கடி பணம் வாங்கி செலவு செய்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பரமேசுக்கு அந்த ஜான்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தான் கொடுத்த பணத்தை ஜான்சி பரமேஷ்வரனிடம் கேட்டுள்ளார். ஆனால் பரமேஷ்வரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜான்சி வீட்டில் இருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து பரமேஷ்வரன் முகத்தில் தூவி விட்டு அரிவாளை எடுத்து வந்து பரமேஷ்வரனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் பரமேஷ்வரன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டத்தை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள். இதனிடையே இந்த கொலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தென்தாமரை குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து விசாரணை நடத்தினார்கள். இதில் பரமேஷ்வரனை எதிர் வீட்டை சேர்ந்த பெண் வெட்டி கொன்ற சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா? அல்லது திட்டமிட்டடு செய்யப்பட்டதா? என்று சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால் பரமேஷ்வரனை அரிவாளால் வெட்டுவதற்கு முன் அவர் ஓடி விடக்கூடாது என்பதற்காக மிளகாய் பொடியை கரைத்து அவரது முகத்தில் ஊற்றி இருக்கிறார்கள். இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு பரமேஷ்வரனால் சரியாக ஓடி தப்ப முடியாமல் போனது. ஆனால் மிளகாய் பொடியை கரைத்து ஊற்றியது சம்பந்தப்பட்ட பெண்ணா? அல்லது அவரது கணவரா? என்று தெரியவில்லை. இதை வைத்து பார்க்கும் போது பரமேசை கொலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டது போல தெரிகிறது. எனவே இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதலி ஜான்சி மற்றும் அவரது கணவரை பிடித்து தென்தாமரை குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் கள்ளக்காதலனை கள்ளக்காதலியே மிளகாய் பொடி தூவி ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.