மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை அரிவாளால் வெட்டிய கணவன்
தேனி மாவட்டம் சின்னமனூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறி வாலிபரை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் இன்று காலை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாலிபர் ஒருவர் அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக தலை மற்றும் கைகால் பகுதியில் வெட்டியுள்ளார். அதில் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்து கிடந்த வரை அக்கம் பக்கத்தினர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும் அரிவாளால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிசைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பதும், தனது மனைவி முனீஸ்வரியுடன் பாதிக்கப்பட்ட சின்னமனூரைச் சேர்ந்த சசிக்குமார் தகாத உறவில் இருந்ததாகவும் அதனால் ஆத்திரம் அடைந்து அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார். அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த வாலிபரை அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

