மனைவியை கத்தரிக்கோலால் கொன்ற கொடூர கணவன்
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா நகரில் சந்தேகத்தால் மனைவியை கத்தரிக்கோலால் கொன்ற கொடூர கணவன் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா நகரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கழுத்தை கத்தரிக்கோலால் அறுத்து கொன்ற கொடூர கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவியின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததால் கணவன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
ருத்ரவரத்தைச் சேர்ந்த வெங்கட சென்னய்யா, தனது முதல் மனைவி இறந்த பிறகு, 14 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரேணிப்பள்ளியைச் சேர்ந்த புஷ்பாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அல்லகட்டாவிற்குக் குடிபெயர்ந்தனர். சென்னய்யா ஒரு பழக்கடையில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இருப்பினும், சில காலமாகத் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டிருந்த சென்னய்யா, அவளுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். புதன்கிழமை இரவு தம்பதியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை, தனது மூத்த மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்த சென்னையா, வீட்டில் தனியாக இருந்த புஷ்பாவை திடீரெனத் தாக்கினார். தன்னிடம் இருந்த தையல் கத்திரிக்கோலால் அவளது கழுத்தை அறுத்து, அவரை கொடூரமாகக் கொலை செய்தார்.

