காதலனின் அந்தரங்க பகுதியை தீ வைத்து எரித்த காதலி

 
s

நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகமாகிக் கொண்டே போனதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலி தனது கள்ளக்காதலனின் அந்தரங்கப் பகுதியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார்.    இந்த கொடூர செயலை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் கண்ணுமேய்கி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்.   பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இந்த வாலிபர்.  இவர் அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.

உடல் நலக்குறைவாழ் கணவர் இறந்து விட்டதால் கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வந்த  மகேஸ்வரிக்கும் முத்துக்குமாருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ள உறவாக மாறி இருக்கிறது .  இந்த உறவை பயன்படுத்திக் கொண்ட முத்துக்குமார்,   மகேஸ்வரி இடமிருந்து அடிக்கடி பணம் நகைகளை கேட்டு வாங்கி செலவு செய்து வந்திருக்கிறார் .  அவற்றை திருப்பி கேட்ட போது தர மறுத்து சண்டை போட்டு வந்திருக்கிறார்.

fi

 நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகமாக கொடுத்து வந்ததோடு அல்லாமல் ,  பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்ததால் முத்துக்குமார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் மகேஸ்வரி.   இதனால் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான தவசிப்பட்டிக்கு செல்லும் காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருப்பதற்காக இருவரும் சென்றிருக்கிறார்கள்.   ஆனால் முன்கூட்டியே மகேஸ்வரி முத்துக்குமாருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்திருக்கிறார்.  

 அதன்படி இருவரும் உல்லாசமாக இருந்தபோது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து முத்துக்குமாரின் இடுப்புக்கு கீழே ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி இருக்கிறார்.   தீ விபத்தில் படுகாயம் அடைந்த முத்துக்குமார் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   அவரிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார்,   மகேஸ்வரியை கைது செய்துள்ளனர் .

பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதற்காக கள்ளக்காதலனின் அந்தரங்க பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.