16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலைமிரட்டல் விடுத்த தந்தை

 
si

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை போக்சோ நீதிமன்றம் .

சென்னையில் வில்லிவாக்கத்தில் வசித்து வந்த 42 வயதான வாலிபர் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார் .  மனைவியை பிரிந்து இரண்டு பெண் குழந்தையுடன் வசித்து வந்திருக்கிறார்.  மதுப்பழக்கம் அதிகம் உடைய அந்த வாலிபர் கடந்த 2019 ம் ஆண்டில் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். 

d

 பின்னர் இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.  இதன் பின்னர் சிறுமி உறவினர்களிடம் அந்த விவரத்தை சொல்லி அழுததும் உறவினர்கள் மூலமாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமி புகார் அளித்திருக்கிறார்.   இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  நீதிபதி எம்.  ராஜலட்சுமி இந்த வழக்கினை விசாரித்து வந்த வழக்கில் விசாரணைகள் முழுவதுமாக முடிவடைந்து இரு தரப்பின் வாதங்கள் நிறைவடைந்து இன்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 

குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதால் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.  மேலும்,  பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு தெரிவித்திருக்கிறார்.