சாமாதானம் பேச சென்ற இடத்தில் நடந்த கொடூர கொலை

 
murder murder

செம்பட்டி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, போடிகாமன்வாடியைச் சேர்ந்தவர் தங்கவேல் (60). இவரது மனைவி நீலாவதி (55) இவர்களது மகன் சண்முகவேல் (35). இவருக்கும் செம்பட்டி அருகே, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரது மகள் நந்தினி (30) ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராம் தர்ஷன் (9)  சாய் ஜனா (7) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,  நந்தினி கடந்த 5  ஆண்டுகளுக்கு மேலாக கணவன்  மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு குழந்தைகளுடன்  பிரிந்து, பாளையங்கோட்டையில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில்,  இதுகுறித்து  நந்தினி அண்ணன் தங்கசடையான் (36) இவரது நண்பர் மதுரையைச்  சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய இருவரும்  போடிகாமன்வாடியில் உள்ள, மைத்துனர் சண்முகவேலிடம் சென்று தனது தங்கை வாழ்க்கைப் பிரச்சனை  குறித்து விளக்கம் கேட்க சென்றுள்ளார். அப்போது, வீட்டில் சண்முகவேல் இல்லாததால், அவரது தாயார் நீலாவதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கசடையான் இவரது நண்பர் மணிகண்டன் ஆகிய இருவரும் இரும்பு கம்பியால்  நீலாவதியை தலையில் தாக்கி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நீலாவதி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த,  செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன்,  சார்பு-ஆய்வாளர் விஜயபாண்டி ஆகியோர், நீலாவதி  உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தங்கசடையான்,  மணிகண்டன் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது..