தன்னைவிட அதிகமாக குடித்ததால் நண்பனை கொன்ற இளைஞர்

 
murder

ஈரோட்டில் உடன் அமர்ந்து மது அருந்திய நண்பன் தன்னை விட அதிகமாக குடித்ததாலும், மதுபானம் வாங்க கொடுத்த பணத்தில் மீதி தொகை தராததாலும் ஆத்திரத்தில் பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்த சக நண்பனை போலீசார் கைது செய்தனர். 

murder

ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் 26 வயது இளைஞர் முரளி. கட்டுமானத்தில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி வித்யா ஸ்ரீ, இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற முரளி இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை அவர்கள் வீட்டிற்கு அருகே ரயில்வே காலனி குடியிருப்பு பின்புறம்  முட்கள் நிறைந்த பகுதியில் முரளியின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தெற்கு காவல்துறையினர்  விசாரணை நடத்தினர். முரளி கழுத்தில. பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அருகிலேயே மது பாட்டில்களும் கிடந்தன. நண்பர்கள் அமரந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் முரளி குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில்  போலீசார் விசாரணை நடத்தினர். அவரது செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரணை நடத்தியதில், கடைசியாக அவரது சக நண்பன் அருண்குமாருடன் சென்றது தெரியவந்தது. சலவை தொழிலாளி அருண்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, மது அருந்துவதற்காக வெள்ளி பிரேஸ்லெட்டை கழட்டி முரளியிடம் அருண்குமார் கொடுத்துள்ளார். அதை அடகு வைத்து மதுபானம் வாங்கி வந்த முரளி மீதி பணத்தை தராததுடன், தன்னை விட கூடுதலாக மது அருந்தி உள்ளார்.்இதனால் ஏற்பட்ட கோபத்தில்  பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்..