77வயது முதியவர் செய்ததை எல்லாம் 5 வயது சிறுமி சொல்ல.. பெற்றோருக்கு வந்த ஆத்திரம்

 
i

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 77 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 தேனி மாவட்டத்தில் பெரிய குளம் எடுத்த தேவதானப்பட்டி பகுதிக்கு அருகே இருக்கும் எருமல நாயக்கன்பட்டி.  இப்பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி காமாட்சி.  இவருக்கு 77 வயதாகிறது.   இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் ஐந்து வயது சிறுமியுடன் பழகி வந்திருக்கிறார்.  அந்தச் சிறுமியும் முதியவரிடம் தாத்தா என்று பாசமாக பழகி வந்திருக்கிறார்.

s

 சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் கூலி வேலைக்காக வெளியே சென்று இருக்கிறார்கள்.   அப்போது சிறுமியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.  பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்ற நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட முதியவர் காமாட்சி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

 வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம் அந்த சிறுமி,  முதியவர் காமாட்சி செய்ததை எல்லாம் சொல்லி இருக்கிறார்.  அதைக் கேட்டதும் கடும் ஆத்திரமடைந்த பெற்றோர் சிறுமியை அழைத்துக் கொண்டு ஜெயமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று காமாட்சி மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காமாட்சியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.   

 ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 77 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் எருமலை நாயக்கன் பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.