மனைவியை நடுரோட்டில் சுட்டுக்கொன்ற கணவன்! வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த பின்னணி

 
ச்

லக்னோவில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட எஸ்பிஐ வங்கி ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம்


ஆலம்பாக்கில் உள்ள சிங்கர் நகரைச் சேர்ந்தவர் திவ்யா மிஸ்ரா. இவர் கோமதி நகரில் உள்ள விவேக் கண்டில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கிக்கு வெளியே இன்று காலை 11:22 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றிவரும் நிலையில், அவரது கணவர் மனஸ் பாஜ்பாய் திவ்யாவை பின் தொடர்ந்து, பதுங்கியிருந்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றதாக தெரிகிறது. திவ்யா உடனடியாக மீட்கப்பட்டு ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். திவ்யா பத்திரிகையாளரும் யூடியூபருமான பிரக்யா மிஸ்ராவின் சகோதரி ஆவார். விசாரணையில், தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திவ்யா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அது குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. 

Image

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, ஹுசதியாவில் உள்ள தனது இல்லத்திற்குத் தப்பிச் சென்ற மனஸ், தனது வீட்டில் இருந்த சகோதரி விபா பாஜ்பாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. திவ்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த மூன்று கொலைகளும் நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. தற்கொலைக்கு முன்பாக மனஸ் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில். ”என் மனைவி எனக்குத் துரோகம் செய்ததால் அவளைக் கொன்றுவிட்டேன்... இப்போது என்னையும் என் சகோதரியையும் கொல்ல வேண்டும்... அவளுடைய சகோதரி பிரக்யாவுக்கும் பரத்துக்கும் எல்லாம் தெரியும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.