"காட்டுப்பகுதியில் இருவரும் உல்லாசமாக இருந்தோம்; பின்னர் நகைக்காக கழுத்தை நெரித்து கொன்றேன்"- கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

 
s

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே 26 வயது செவிலியரைக் கொலை செய்து, அவரது தங்கத் தாலிச் சங்கிலியைத் திருடிய வழக்கில், 23 வயது மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்த உத்ராவின் சக ஊழியரான எம். சரவணன், திங்களன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். செவிலியரிடம் அவர் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன என்றும் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்

காவல்துறையின் தகவல்படி, அக்டோபர் 15 அன்று பெருந்துறைக்கு வந்த உத்ராவை, சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அவரது நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொலை செய்துள்ளார். வழக்கமாக வேலைக்கு செல்லும் முன் உத்ராவின் கணவர் ரஞ்சித்குமார் மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு செல்வார். மாலையில் சென்று வீட்டு அழைத்து வந்துவிடுவார். அதன்படி கடந்த 14-ந் தேதி உத்ராவை மருத்துவமனையில் கொண்டு சென்றுவிட்டார். மீண்டும் அன்று மாலையில் அழைத்து வருவதற்காக சென்றார். அப்போது உத்ரா ஏற்கனவே வீட்டுக்கு புறப்பட்டுவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள பொன் கைலாஷ் நகரில் அக்டோபர் 17 அன்று உத்ராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அவரது உடல், பின்னர் விசாரணையின்போது அடையாளம் காணப்பட்டார். ஆரம்பத்தில், திருப்பூர் மாவட்டம் உத்துக்குளி போலீசார், உத்ரா காணாமல் போனது குறித்து புகார் வந்ததை அடுத்து, அக்டோபர் 15 அன்று காணாமல் போனவர் என வழக்குப் பதிவு செய்தனர். அவர் வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காணாமல் போயிருந்தார். பெருந்துறை அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன செவிலியருடையது என்பதை உறுதி செய்த பிறகு, பெருந்துறை போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

கைதான  சரவணன் அளித்த வாக்குமூலத்தில், மருத்துவமனையில் பணியாற்றியபோது உத்ராவிற்கும் எனக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதற்கிடையே எனக்கு நல்ல சம்பளத்தில் வெளியூரில் வேறு வேலைகிடைத்தது. சம்பவத்தன்று, நான் மோட்டார் சைக்கிளில் உத்ராவை அழைத்துக் கொண்டு விஜயமங்கலம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது திடீரென உத்வின் துப்பட்டாவை எடுத்து அவருடைய கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவரது கழுத்தில் இருந்த நகையை கழற்றி எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டேன். ஆனால் மருத்துவமனையில் நடந்த விசாரணையால் நான் சிக்கிக் கொண்டேன்" என்றார்.