22 வயது பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் செய்து கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்

 
22 வயது பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் செய்து கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்

கர்நாடகாவில் 22 வயதுப் பெண் ஒருவர் நான்கு பேரால் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

சிர்வார் தாலுக்காவின் ஹோக்ரானி கிராமத்தில் 22 வயதுப் பெண் ஒருவர் நான்கு பேரால் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. நான்காவதாக சந்தேகப்படும் நபரைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.
 
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி, ஆகஸ்ட் 19 அன்று இரவு 7 மணியளவில், அந்தப் பெண் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக கிராமத்தின் புறநகர்ப் பகுதியான பீரப்பா கோயிலுக்கு அருகில் சென்றபோது, ​​நான்கு பேரால் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்துள்ளனர். தங்களை குடும்பத்தினரிடம் காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் நான்கு பேரும் அப்பெண்ணை கொலை செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு, பெண்ணின் உடலை தொட்டலா கிராமத்தில் உள்ள  கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.  ஆகஸ்ட் 20 அன்று காலை, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கிணற்றுக்குள் அவரது உடலைக் கண்டபோது இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தந்தையின் புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.