12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்கள்

 
gg

பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் கிண்டல் செய்து வந்த இளைஞர்கள் ஒருநாள் அத்துமீற அந்த  மாணவி அந்த  இளைஞரின் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.   அந்த ஆத்திரத்தில் அந்த மாணவியை பழிவாங்க அவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரின் வாயை துணியால் கட்டி, கை , கால்களை கட்டி பாலியல் வன்கொடுமை செய்து  பெட்ரோல் ஊற்றி எரித்து இருக்கிறார்கள் அந்த கொடூர இளைஞர்கள்.    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிலிபட் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

பிலிபட் மாவட்டத்தில் மதோடன்டா  கிராமத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பெற்றவர்களுடன் வசித்து வந்துள்ளார்.   இந்த மாணவியின் தந்தை விவசாயி கடந்த வாரம் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார்.   வீட்டில் ஓய்வு எடுத்து வந்தபோது அவரின் தந்தை விவசாய வேலைகளுக்காக வெளியே சென்று இருக்கிறார் .  மாணவியின் தாயார் உறவினர் வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

h

 இதன் பின்னர் மாலையில் வேலை முடித்து தந்தை வீடு வந்து பார்த்தபோது மகள் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.   இதை பார்த்து கதறிய தந்தை அக்கம் பக்கத்தினரின் உதவி உடன் மகளை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார்.   அங்கு 80 சதவிகித தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை  பெற்று வருகிறார் அந்த மாணவி.

நேற்று தான் அந்த மாணவி சுயநினைவது திரும்பி இருக்கிறது . அப்போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,  பள்ளிக்கு செல்லும் வழியில் இளைஞர்கள் சிலர் கலந்து கிண்டல் செய்து வந்தனர்.   கடந்த இரண்டாம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது ஒரு இளைஞர்  ஓவராக கிண்டல் செய்ததால் அவரை கன்னத்தில் அறைந்தேன். அதன்  பின்னர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபோது கடந்த ஏழாம் தேதி என்று நான் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அந்த இளைஞரும் அவரது நண்பரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.  

f

 அவர்களை கண்டதும் அதிர்ச்சி  அடைந்த நான் அக்கம்பக்கத்தினர் கூப்பிடுவதற்குள் என் வாயை துணியை வைத்து அடைத்து துணியால் கட்டி விட்டார்கள் .  கை, கால்களையும் கட்டி வைத்தார்கள்.   அந்த இளைஞர்கள் இரண்டு பேரும் மாறி மாறி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.   அப்படியும் ஆத்திரம் தீராத அவர்கள்  பெட்ரோல் எடுத்து என் மேல் ஊற்றிய பற்ற வைத்து விட்டார்கள்.   வாயில் துணி கட்டி இருந்ததால் என்னால் கதறி அழ முடியவில்லை.  வலியால் துடித்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.

 மாணவியின் வாக்குமூலத்தின் படி இளைஞர் தினேஷ் யாதவ் அவரது நண்பரையும் அவரது நண்பர் அமர் சிங்கையும் போலீசார் கைது செய்துள்ளனர்.