முழு நிர்வாணத்தை வீடியோ ரெக்கார்ட் செய்ததால் இளைஞர் தற்கொலை

 
i

வீடியோ காலில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக பேசியதை ரெக்கார்ட் செய்து மிரட்டி பணம் கேட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். புதுச்சேரியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் ஆத்து வாய்க்கால் பேட் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன்.   கூலித்தொழிலாளியான  இவருக்கு ஒரு மனைவி, மகள் ,இரண்டு மகன்கள் இருந்தனர்.   மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.    இரண்டாவது பிள்ளை கண்ணன் டிரைவர் டிரைவர் வேலை செய்து வந்திருக்கிறார். மூன்றாவது பிள்ளை சந்துரு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்திருக்கிறார்.

ch

25 வயதான சந்துரு வேலை இல்லாத நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்.    இந்த நிலையில் திடீரென்று சந்துரு அவரது வீட்டின் அருகே இருந்த கொய்யா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  

 சம்பவம் குறித்து அறிந்தபோது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட சந்துருவின்  செல்போனை கைப்பற்றி தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் தென்படுகின்றனவா என்று ஆய்வு செய்தனர்.  அப்போது  தற்கொலைக்கு முன்னதாக சந்துரு வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.  அந்த வீடியோவில்  தன்னை முகநூல் மூலம் நண்பர் ஒருவர் வீடியோ கால் செய்து ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக இருந்த வீடியோவை ரெக்கார்டு செய்து வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.   இதற்கு காரணமான அந்த நபரை விடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

 இதை அடுத்து போலீசார் அந்த முகநூல் நண்பர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதே நேரம் நண்பரை போல யாரும் முகநூலில் வீடியோ கால்களில் வந்தால் நிர்வாணமாக நிற்பதை தவிர்க்கவும் என்றும் எச்சரித்துள்ளனர்.