ஒரு குளியல் வீடியோவால் 17 லட்சத்தை இழந்து பெண் கண்ணீர்

 
வி

ஒத்திகைக்கு வீடு எடுத்து மனைவியை தங்க வைத்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் கணவர்.   அந்த பெண் குளிப்பதை வீடியொ எடுத்து மிரட்டி பணம் பறித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் வீட்டு ஓனர்.  அவரின் மிரட்டலுக்கு பயந்து 17 லட்சம் ரூபாய் பணத்தை இழந்து இருக்கிறார்.  அதற்கு மேலும் அந்த வீட்டு ஓனர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதால் அடியாட்களை வைத்து மிரட்டுவதால் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அந்தப் பெண் கண்ணீருடன் புகார் அளித்திருக்கிறார்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியைச் சேர்ந்த தமிழ்மணி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.   இவர் தனது மனைவியை 2 லட்சம் ரூபாய்க்கு ஒத்திகைக்கு வீடு எடுத்து தங்க வைத்திருக்கிறார்.  கடந்த ஒரு வருடமாக அந்த வீட்டில் மனைவி வசித்து வந்திருக்கிறார்.  ஒத்திகைக்கு கொடுத்த பணத்திற்காக அந்த வீட்டு உரிமையாளர் எந்த ஆவணமும் எழுதி தரவில்லையாம்.

வ்வ்

 இந்த நிலையில் கடனாக அந்த வீட்டு உரிமையாளரிடம் 50,000 ரூயாப் வாங்கியிருக்கிறார்.  அதற்காக வெற்று பத்திரத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறார்.   இதன் பின்னர் அவர் அந்த வீட்டு ஓனரிடம் 10 வட்டிக்கு 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார் .  அதன் பின்னர் கடனை திருப்பி கேட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்து இருக்கிறார் உரிமையாளர் .  

அப்போது அந்த பெண் வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததை  மறைந்து நின்று செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்.   அந்த வீடியோவை காட்டி அந்த பெண்ணை அடிக்கடி மிரட்டி வந்திருக்கிறார்.  வீட்டு ஓனரின் அத்துமீறல்கள் அதிகமாகவே அந்த பெண் எச்சரித்து இருக்கிறார் . அதற்கு நான் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டால் உன்னை விட்டு விடுவேன்.   இல்லை என்றால் இந்த வீடியோவை வெளிநாட்டில் இருக்கும் இருக்கும் உன் கணவருக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் .

வெளிநாட்டிற்கு வெளிநாட்டில் வேலை செய்யும் கணவனுக்கு அந்த வீடியோவை அனுப்பினால் அவர் என்ன நினைப்பாரோ  என்கிற பதட்டத்தில் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து 17 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்.   அதன் பின்னர் அந்த வீட்டை காலி செய்ய முயற்சித்து இருக்கிறார் அந்த பெண்.  ஆனால், வீட்டை காலி செய்ய விடாமல் வீட்டில் உள்ள ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள பொருட்களையும் எடுக்க விடாமல் அடிஆட்களை வைத்து விரட்டி  வந்திருக்கிறார் வீட்டு ஓனர். மேலும்  பாலியல் தொல்லையும் கொடுத்து வந்திருக்கிறார்.   இதனால் அந்த பெண் ராமநாதபுரம் எஸ். பியிடமும்,  பரமக்குடி காவல் துறை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்திருக்கிறார்.   புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.