நண்பர்களை பழிவாங்க அந்தரங்க பகுதியில் சூடு வைத்ததாக பெண் பொய் புகார்

 
l

வியாபாரத்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட போட்டியில் நண்பர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக வீடு புகுந்து தன்னை கூட்டு பாலில் வன்கொடுமை செய்து அந்தரங்கப் பகுதியில் சூடு வைத்ததாக பெண் புகார் அளித்திருக்கிறார்.   இந்த புகாரில் கைது செய்யப்பட்டவர் 40 நாள் சிறையை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.   இந்த நிலையில் அந்தப் பெண் அழித்தது பொய் புகார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்திருக்கிறது. 

 மும்பையில் குர்லா பகுதியில் வசித்து வரும் அந்த 42 வயது பெண் பரபரப்பு புகாரை அளித்திருந்தார்.   நவம்பர் 30ஆம் தேதி அன்று அதிகாலையில் தன் வீட்டிற்குள் மூன்று பேர் அத்து நுழைந்தார்கள்.   கத்தியை காட்டி தன்னை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.   பின்னர் தன்னை தாக்கி பிறப்பு உறுப்பில் சூடு வைத்தார்கள் என்று கூறியிருந்தார்.

g

 இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.   மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    விசாரணையில் தாங்கள் அப்படி ஒரு செயலை செய்யவில்லை என்று இருவரும் மறுத்துள்ளனர்.  இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.   இதை அடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.  

 மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.  உடம்பிலிருந்த காயங்களும் தானாக அந்தப் பெண்ணே ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.  சந்தேகத்தின் பெயரில் இன்னொரு மருத்துவமனையிலும் சோதனை நடந்திருக்கிறது.  அங்கேயும் இதே முடிவுகள் வந்திருக்கின்றன.

 இதை அடுத்து அந்த பெண்ணை அழைத்து அவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்திய போது தான் அந்த பெண் கொடுத்தது போலி புகார் என்பது தெரிய வந்திருக்கிறது.  மூன்று நண்பர்களாக இருந்து தொழில் செய்து வந்தோம்.  வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்களை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இப்படி பொய் புகார் அளித்ததாக அந்த பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

 அந்த பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அந்த ஒரு வாலிபர் கடந்த 40 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.  இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.   எந்த தப்பும் செய்யாமல் 40 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் ஒருவர்.   அதனால்  அந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.