சந்தேகமடைந்த கணவனை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி

 
murder

மயிலாடுதுறை போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை வெட்டிக் கொன்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu Class 12 board exam 2019: Brave student writes her Tamil 1 board  examination after losing parents in car crash

திருநெல்வேலி மாவட்டம்  வள்ளியூர் கூத்தங்குடி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் மண்தாங்கிதிடல் பகுதியைச் சேர்ந்த ரம்யாவும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளனர். தற்பொழுது மயிலாடுதுறையில் இவர்கள் வசித்து வந்த நிலையில் அடிக்கடி குடி போதையில் மனைவியிடம் பணம் கேட்பதும் சந்தேகப்பட்டும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் இன்று அளவுக்கு அதிகமான போதையில் மனைவிடம் தகராறு ஈடுபட்ட ஆத்திரத்தில் மனைவி ரம்யா(29) அரிவாளால் கணவன் குமாரை(32)  வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரம்யாவை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.