கள்ளக்காதலனை மறக்கச் சொன்னதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

 
ர்

கணவன் வேலைக்கு சென்ற பின்னர்  கள்ளக்காதலனுடன்  உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார் அந்த பெண்.  திடீரென்று கள்ள உறவை  கைவிடச் சொன்னதால் கள்ளக்காதலனை மறக்க சொன்னதால் மன வேதனை அடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  கோவை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 கோவை மாவட்டத்தில் காட்டூரைச் சேர்ந்த  அந்தப் பெண்,  திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.  பெண்ணின் கணவர் சமையல்காரர் என்பதால் அவர் அடிக்கடி சமையல் வேலைக்காக வெளியே மற்றும் வெளியூர் சென்று இருக்கிறார்.  

சு

 இந்த நிலையில் வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம்  ஏற்பட்டிருக்கிறது.  அந்த உறவு பின்னர் கள்ள உறவாக மாறி இருக்கிறது.  கணவன் வேலைக்கு வெளியே செல்லும் நேரங்களில் எல்லாம் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.  இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை கண்டித்திருக்கிறார்.  ஆனால் அதை மீறி அந்தப் பெண் வாலிபருடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.

 சம்பவத்தன்று இனிமேல் கள்ள உறவு வைக்கக் கூடாது.  கள்ளக்காதலனை மறந்து விட வேண்டும் என்று கண்டிப்பு காட்டி சொல்லியிருக்கிறார் கணவர்.  அதை செய்ய மறுத்திருக்கிறார் மனைவி.  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இதில் ஆத்திரத்தில்  கணவர் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.  அந்த நேரத்தில் மன உளைச்சலில் இருந்த  அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 தகவல் அறிந்த போலீசார்  உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.