இடையூறாக இருந்ததால் மனைவி ஆத்திரம் - எலும்பு கூடாக மீட்கப்பட்ட கணவன்

 
x

கள்ளக்காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கணவனை கொன்று புதைத்திருக்கிறார் மனைவி.   எலும்பு கூடாக மீட்கப்பட்டிருக்கிறார் கணவர். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் அருகே நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 திருக்கழுக்குன்றம் அருகே வெள்ள பந்தல் கிராமத்தின் ஏரிக்கரையில் துர்நாற்றம் வீசியிருக்கிறது.   ஆங்காங்கே எலும்பு துண்டுகளும் சிதறி கிடந்திருக்கின்றன.   இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.   போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிதறி கிடந்த மண்டை ஓடு மட்டும் எலும்பு கூடுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

ய்

 அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் வெள்ளபந்தல் கிராமத்தைச் சேர்ந்த துரை பாபு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்த ஒரு குடும்பம் திடீரென்று யாருக்கும் சொல்லாமல் மாயமானது தெரியவந்திருக்கிறது.   இதை அடுத்து போலீசார் அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர்.   அப்போது அந்த மாயமான குடும்பத்தின் உறுப்பினர் சித்ரா என்ற பெண் சிக்கி இருக்கிறார்.

 அவரிடம் நடத்திய விசாரணையில் சக்திவேல் என்பவர் உடன் தான் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும்,  அதை தனது கணவர் சந்திரன் நேரில் பார்த்துவிட்டு தங்களை அடிக்க ஆரம்பித்தார்.  அதனால் வேறு வழியின்றி கட்டையை எடுத்து நானும் சக்திவேலும் சேர்ந்து கணவரை அடித்தோம் . அதில் அவர் இறந்து விட்டார்.  பின்னர் அவர் உடலை புதைத்து விட்டோம் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் .

இதை அடுத்து சித்ராவையும் அவரின் மூலமாக சக்திவேலுவையும் கைது செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.