கணவர் வேலைக்கு சென்றுவிட்டார் என்று நினைத்து காதலனை அழைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
k

கணவர் வேலைக்குச் சென்று விட்டார் என்று நினைத்த அந்த பெண் காதலனுக்கு போன் போட்டு அழைத்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.  பின் தொடர்ந்து வந்த கணவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து  வெட்டிவிட்டு  தப்பி ஓடி இருக்கிறார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.  மருத்துவமனையிலும் ஒன்றாக ஒன்றாகப் பார்த்ததும் கறி வெட்டும் கத்தியால்  ஆவேசமாக வெட்ட இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால்.  இவரது மனைவி ராஜேஸ்வரி.  திருமணமாகி 9 ஆண்டுகளான இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.   ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற வாலிபருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது .

kk

மனைவியின்  நடத்தையில் சந்தேகம் அடைந்த நந்தகோபால் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறார்.  சம்பவத்தன்று மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்த கோபால் இறைச்சிக் கடையை நடத்தி தான் நடத்திவரும் இறைச்சி கடைக்கு செல்வது போல் சொல்லிவிட்டு மறைந்து நின்று இருக்கிறார் . கணவர் கடைக்கு சென்று விட்டார் என்று நினைத்த ராஜேஸ்வரி கள்ளக்காதலன் இளங்கோவை அழைத்துக் கொண்டு சாவடி பாளையம் பகுதியில் உள்ள பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

 அப்போது பின் தொடர்ந்து வந்த நந்தகோபால்,  இளங்கோவையும் ராஜேஸ்வரியையும் கையும் களவுமாக பிடித்து சத்தம் போட்டு இருக்கிறார்.  இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் குத்தி இருக்கிறார்.  இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரியும் இளங்கோவும் அலறி துடிக்க அங்கிருந்து நந்தகோபால் தப்பி ஓடி இருக்கிறார்.

 அக்கம் பக்கத்தினர் ராஜேஸ்வரியையும் இளங்கோவையும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . மனைவியை  பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் நந்தகோபால் . அங்கே சிகிச்சையில் ராஜேஸ்வரியும் இளங்கோவும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.  மருத்துவமனையிலும் நீங்கள் பிரியாமல் இருக்கிறீர்களே என்று ஆத்திரப்பட்ட நந்தகோபால்,   கறி வெட்டும் கத்தியால் இளங்கோவையும் ராஜேஸ்வரியையும் வெட்டி இருக்கிறார்.  பிற நோயாளிகள் அலறி துடித்து ஓடி இருக்கிறார்கள்.  போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்துள்ளனர்.