டிவியில் வந்த க்ரைம் தொடரை பார்த்துதான் இப்படி செய்தோம் - 5 சிறுவர்கள் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

 
a

டிவியில் வந்த பிரபல க்ரைம் தொடரை பார்த்து  அதில் பெரிதும் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் ஐந்து பேர் சேர்ந்து 7 வயது பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்  40 ஆயிரம் ரூபாய் பணத்தை தவற விட்டிருக்கிறான்.   தான் இழந்த தொகையை எப்படியாவது திரும்ப பெற்றுவிட வேண்டும் என்று அந்த சிறுவன் தன் நண்பர்களிடம் புலம்பியிருக்கிறான்.  உடனே அந்த நண்பர்கள் டிவியில் வரும் பிரபல க்ரைம் தொடரை சொல்லி அதில் வருவது போல ஆழ்கடத்தலில் ஈடுபட்டு இழந்த பணத்தை சம்பாதித்து விடலாம்.   உனக்கு இழந்த பணம் கிடைக்கும் என்று யோசனை சொல்லி இருக்கிறார்கள்.

m

 அதன்படி ஐந்து சிறுவர்களும் திட்டம் போட்டு பள்ளிக் குழந்தையை கடத்தி மிரட்டி அதன் மூலம் பணம் பறிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.  அவர்கள் போட்ட திட்டத்தின் படி கடந்த  ஒன்பதாம் தேதி அன்று 7 வயது பள்ளி சிறுவனை கடத்தி இருக்கிறார்கள்.   அலிகர் என்கிற பகுதிக்கு வண்டியில் கூட்டிச் சென்று அந்த சிறுவனை அடைத்து வைத்திருக்கிறார்கள்.

 ஒரு வேகத்தில் அந்த சிறுவர்கள் கடத்தி வந்து விட்டாலும் தங்களது திட்டம் தோல்வியடைந்து விட்டால் என்ன செய்வது என்று பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.   அதனால் சிறுவனை  கொலை செய்து விடலாம் .  அப்படி கொலை செய்து விட்டால் விஷயம் யாருக்கும் தெரியாது என்று நினைத்திருக்கிறார்கள்.   அதன்படி அந்த சிறுவனை கொன்று அலிகரிலுள்ள ஆற்றில் வீசி சென்று இருக்கிறார்கள்.

rr

 இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளிக்க,   போலீசார் தனிப்படை அமைத்து சிறுவனை தேடி வந்துள்ளனர்.  அப்போது சிறுவனின் உடல்  அலிகர் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப் பட்டெடுக்கப்பட்டிருக்கிறது.  

 இதை அடுத்து  அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் 6 அடிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்ததில் குற்றவாளிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .  அந்த ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில் தான்,   டிவியில் வந்த கிரைம் தொடரை பார்த்து இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.