ஆடைகளை அவிழ்த்து.. பெவிக்குவிக் ஊற்றி.. மனைவி மறுத்ததால் நடந்த பயங்கரம்

 
q

மனைவி மறுத்து விட்டதால் அவரின் ஆடைகளை அவிழ்த்து கை, கால்களை கட்டி போட்டு அந்தரங்கப் பகுதியில் பெவிக்குவிக் ஊற்றி உள்ளார் கணவர்.  மத்திய பிரதேச மாநிலத்தில் கோபால் பகுதியில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் ஜியோ பூர் மாவட்டத்தில் சென் ஹாஸ்டல் என்கிற பகுதியில் வசித்து வந்த தம்பதிகளுக்குள் திடீரென்று இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடந்திருக்கிறது.  திருமணத்திற்கு பின்னர் சில வருடங்கள் இவர்களில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்று இருக்கிறது.   

அதன்பின்னர் அந்தப் பெண்ணின் கணவர் நாளடைவில் தனது உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.   அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து போதையில் தகராறு செய்திருக்கிறார்.   இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்திருக்கிறது.   

h

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளித்து புது உடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்ல தயாராக இருந்திருக்கிறார் கணவர்.  அந்த நேரத்தில் திடீரென்று மனைவியுடன் வாக்குவாதம் செய்து இருக்கிறார்.   இதனால் அவரை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார்.   அத்தோடு இல்லாமல் மனைவிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார் .

இதை அடுத்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி இருக்கிறார்.  பின்னர் மனைவியின் கை,  கால்களை கட்டி வீட்டில் இருந்த பெவிக்குவிக்  எடுத்து வந்து மனைவியின் அந்தரங்கப் பகுதியில் ஊற்றி கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார்.  இதில் மனைவி அவமானம் தாங்க முடியாமல் அலறி இருக்கிறார். 

 அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.    உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.   சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

போதைக்கு அடிமையானதால் குடிக்க பணம் கேட்டதாகவும்,  அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால்  இப்படி ஒரு கொடூரத்தை அந்த பெண்ணின் கணவர் செய்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வரை தேடி வருகின்றனர் போலீசார்.