ஆடைகளை அவிழ்த்து நின்ற பெண்...வீடியோவை டெலிட் செய்ய ரூ.7.5 லட்சம் கொடுத்த தொழிலதிபர்

 
v

ஆடைகளை அவிழ்த்து நின்ற பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று சொல்லி அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும், பின்னர் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் சொல்லி சைபர் கிரைம் போலீசார் மிரட்டுவது போல் மிரட்டி ஏழரை லட்சம் ரூபாய் பணத்தை பறித்து உள்ளது மோசடி கும்பல்.  பணத்தை இழந்த தொழில் அதிபர் தற்போது போலீசுக்கு போயிருக்கிறார்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

gg

 மும்பையைச் சேர்ந்த அந்த நபர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில்,   நான் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.  மும்பையில்  கிழக்கு பகுதியில் இருக்கும் எனது நண்பரின் வீட்டில் கடந்த 14ஆம் தேதி தங்கியிருந்தேன்.   அப்போது என் பேஸ்புக்கில் அங்கித்சர்மா என்கிற இளம்பெண் ப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தார்.    நான் ஓகே செய்ததும் என்னுடன் உரையாடினார்.   சாட்டிங் செய்த பின்னர் வீடியோ கால் செய்த அந்த பெண் திடீரென்று ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்.  நான் ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து துண்டித்து விட்டேன் .

பின்னர் மீண்டும் அந்த பெண்  அழைத்து பேசினார்.   அப்போது எனது வாட்ஸ் அப் எண்ணை வாங்கிக் கொண்டார்.   வாட்ஸ் அப் எண்ணிற்கு கால் செய்தார். அப்போதும் திடீரென்று ஆடைகளை முழுவதுமாக கழட்டி தனது உடல் முழுவதையும் காட்டினார்.  அப்போது என் முகத்தை கேமராவில் காட்டும் படி கேட்டார்.  அதனால் எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது.   அதனால் நான் என் முகத்தை காட்டவில்லை .  

ஏதோ தவறு நடக்கும் என்பதை உணர்ந்து நான் உடனே அந்த வீடியோ காலை துண்டித்து விட்டேன்.  ஆனால் மறுநாள் எனக்கு ஒரு வீடியோ கிளிப் வந்தது.  அதில் அந்த பெண்ணுடன் நான் பேசிய வீடியோ கால் ரெக்கார்டு பதிவாகி இருக்கிறது.   நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது .  என்னுடன் வீடியோ காலில் பேசிய அந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும்,  அதற்கு நான் தான் காரணம் என்றும் சொல்லியிருந்தார்கள்.

vv

 அதன் பின்னர் அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றால் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டார்கள்.  கொலை வழக்கில் சிக்க கூடாது என்று பயந்த நான் அந்த பணத்தை அனுப்பி வைத்தேன்.  அதன் பின்னர் இறந்து போன பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும் என்று சொல்லி 5 லட்சம் ரூபாய் கேட்டார்கள் . என்னிடம் பணம் இல்லாவிட்டாலும் கஷ்டப்பட்டு அந்த பணத்தை புரட்டி அனுப்பி வைத்தேன் . அதற்கு மேலும்  பணம் கேட்டு மிரட்டி வந்தார்கள்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நான்  இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக போலீசு வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

 வீடியோ காலில் பெண்கள் நிர்வாணமாக பேசி பின்னர் அதை வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது.  ஆனாலும் இந்த குற்றங்கள்  தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.  பணத்தை இழந்த பின்னர்தான் எல்லோரும் போலீசுக்கு வருகிறார்கள்.