16 வயது சிறுமிக்கு மதுக் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உட்பட இருவர் கைது

 
rape

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மது வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கிராம நிர்வாக உதவியாளர் ஒருவர் மற்றும் 16 வயது சிறுவன்  ஒருவன் என இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bangla woman gang-rape: 12 convicted, lifer for seven

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை  கடத்திச் சென்று அவருக்கு தெரியாமல் மது வாங்கி கொடுத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வரும் முருகேசன்(38)  மற்றும் ஒரு 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்ததையடுத்து முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மற்றொரு குற்றவாளி 16 வயது சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் அந்த சிறுவனை ஆஜர்படுத்திய போலீசார் அவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சென்று அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.