இரண்டு பேர் காதலனை பிடித்துக்கொள்ள மாறி மாறி காதலி பாலியல் வன்கொடுமை- இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 
h

காதலனை அடித்து போட்டுவிட்டு, பின்னர் கைகளை கட்டி பிடித்துக்கொண்டு காதலியை மூன்று பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது.

கடலூரில் கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி அன்று தனது ஆண் நண்பருடன் இருபத்தி ஒரு வயது இளம்பெண் கம்மியம்பேட்டை பகுதியில் இருக்கும் பாழடைந்த வீட்டில்  பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென்று அந்த வீட்டிற்குள் நுழைந்து காதலர்கள் இரண்டு பேரையும் கடுமையாக தாக்கி விட்டு ,  காதலர்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்துவைத்து செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்கள்.

c1

 பின்னர் இதனை  வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி அந்த பெண்ணை ஆசைக்கு இணங்க  வைத்து இருக்கிறார்கள்.  அதற்கு மறுப்பு தெரிவிக்கவே காதலனின் கண்முன்னே  காதலியே பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.  இவர்கள் மூன்று பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு,  இங்கு நடந்ததை வெளியே சொன்னால் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைத்து எடுத்திருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.

 இதன் பின்னர் அந்தப் பெண் அங்கிருந்து வந்து கடலூர் தபால் நிலையம் பகுதியில் நள்ளிரவில் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று அழுது கொண்டிருந்திருக்கிறார் அப்பெண்.  அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் அவரிடம் விசாரித்த போது தான் தனக்கு நேர்ந்த சம்பவத்தைச் சொல்லி அழுதிருக்கிறார்.  இதை அடுத்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போலீசார் அந்த பெண்ணின் காதலனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர் என்றும்,  3 வாலிபர்களை அழைத்து வந்து காதலனிடம் விசாரணை நடத்திய போது இவர்கள் தங்களை அடித்துப் போட்டு விட்டு தன் காதலியை வன்கொடுமை செய்தது என்று காதலன் அடையாளம் காட்டியிருக்கிறார்.

 3 பேர் மீதும் வழிப்பறி, கொலை மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தனர்.  தற்போது அவர்களை ஓராண்டுகாலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டதன் மூலம்,  3 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.