ஒலிபெருக்கியின் சத்தத்தால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்காத பரிதாபம்

 
ச்

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை காட்டுக்குள் தூக்கிச் சென்றிருக்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். அப்போது ஊரில் நடந்த நிகழ்ச்சி வைத்திருந்த  ஒலிப்பெருக்கியின் சத்தத்தால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் போயிருக்கிறது.  இது அந்த ஆட்டோ டிரைவருக்கு ரொம்பவே சாதகமாக அமைந்திருக்கிறது.  ஆனாலும் அதன் பின்னர் ஊர் மக்கள் ஒன்று திரண்டு வந்த போது அந்த ஆட்டோ டிரைவர் தப்பி ஓடி இருக்கிறார்.  பின்னர் பிடிபட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.

சொ

திருவண்ணாமலையில் குண்ணவாக்கம் குளக்கரை பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ்.  34 வயதான இந்த வாலிபர் ஆட்டோ டிரைவர்.   இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர்.   இவர்  வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளில் 11 வயதுடைய ஒரு சிறுமியை வாயைப் பொத்தி காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். 

  அப்போது சிறுமி அலறி துடித்து இருக்கிறார் .  அந்த நேரத்தில் ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியின் சத்தத்தில் சிறுமியின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்காமல் இருந்திருக்கிறது.   இது அந்த ஆட்டோ டிரைவர் சுரேஷுக்கு ரொம்பவே சாதகமாக போய் இருக்கிறது. தப்பி ஓடிய ஒரு சிறுமி ஊருக்குள் சென்று எல்லோருக்கும் விவரம் சொல்ல,   ஊர் மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.   அதற்குள் அந்த சிறுமியை வன்கொடுமையை செய்துவிட்ட அந்த ஆட்டோ டிரைவர் ஊர் மக்கள் திரண்டு வருவதை கண்டதும் தப்பி ஓடி இருக்கிறார். 

ல்

 பின்னர் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.   சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர்.   போலீசாரின் தீவிர தேடலில் சுரேஷ் பிடிப்பட்டிருக்கிறார்.   கடந்த 2013 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

உ

 சம்பவம் தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.   இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து சுரேஷ் மீது குற்றச்சாட்டு உறுதியாகி இருப்பதால் அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.   சிறுமியை வன்கொடுமை செய்த சுரேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறார் நீதிபதி பார்த்தசாரதி.