மூன்று பேர் அமரும் இருக்கை -மூன்றாவதாக அமர்ந்த காவலரால் சிறுமி கதறல்

 
ப்

ஓடும் பேருந்தில் சிறுமியின் அருகில் அமர்ந்து தோளில் கை போட்டுக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  போலீசாரின் விசாரணையில் அவர் காவலர் என்பது தெரிய வந்திருக்கிறது.  

 செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமி தனது தாயாருடன் தாம்பரத்திலிருந்து மதுராந்தகம் சென்றிருக்கிறார்.  அந்த அரசு பேருந்து மூன்று பேர் அமரும் இருக்கை.   அதில் தாயும் மகளும் இருவரும் அமர்ந்து இருந்தபோது அந்த சிறுமியின் அருகே ஒரு வாலிபர் வந்து அமர்ந்திருக்கிறார்.

ff

 பேருந்து செல்லச்செல்ல அந்த சிறுமியை உரசி அவரின் மேல் கை போட்டு பாலியல் தொல்லைகள் கொடுத்திருக்கிறார் அந்த வாலிபர். இதனால் மனம் வெதும்பிய சிறுமி அழுகையை அடக்கொண்டே வந்திருக்கிறார். இதை கவனித்துவிட்ட  தாய் மகளிடம் விசாரிக்க,  அந்த சிறுமி அவ்வளவு நேரமும் அடக்கிக்கொண்டிருந்த அழுகை வெடித்திருக்கிறது. 

மகள் சொன்னதைக்கேட்டு அந்த தாய் அங்கிருந்த பயணிகளிடம் சொல்ல , பேருந்தில் இருந்தவர்கள் அந்த வாலிபரை தாக்கி இருக்கிறார்கள்.  பின்னர் பேருந்து மதுராந்தகத்தை நெருங்கும்போது அங்கு மதுராந்தகம் காவல் நிலையத்தில் பேருந்து நிறுத்தி உள்ளனர்.   அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் மதுராந்தகத்தை அடுத்து முதுகரை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும். 35 வயதான அந்த வாலிபர் பெயர் சதீஷ் என்பதும்,  அவர் சென்னையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

சிறுமியின் தாயார் அளிக்க புகாரின் பேரில் காவலர் சதீஷ் மீது மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  
காவலர் சதீஷிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.