மூன்று நாள் அடைத்து வைத்து.. பட்டியலின சிறுமிக்கு நடந்த கொடுமை

 
sஇ

 பட்டியலின சிறுமி மூன்று நாள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.  அங்கிருந்து தப்பித்து வந்த அந்த சிறுமி போலீசில் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் அந்த சிறுமியை கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள்.   மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இங்கு அதிர்ச்சி சம்பவம்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது பட்டியலின சிறுமி ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போய் இருக்கிறார்.  மகளை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் தேடுவதில் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.

 இந்த நிலையில் தானாகவே மூன்று நாட்களுக்கு பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பி இருக்கிறார்.   மூன்று நாட்கள் எங்கே இருந்தாய் என்று பெற்றோர் வந்து மகளிடம் கேட்க,   பாபு கான் என்பவர் தன்னை வலுக்கட்டாயமாக அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே அடைத்து வைத்து மூன்று நாள்  பாலியல் வன்கொடுமை செய்தார் என்று சொல்லிவிட்டு அழுது இருக்கிறார். 

ட்

 இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மீண்டும் மகளை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.  அங்கிருந்த காவலர்கள் சிறுமியையும் அவரது தாயையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். 

 மகளே மூன்று நாள் காணவில்லை என்று புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை .  மூன்று நாள் ஒருவர் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று புகார் கொடுக்க வந்த தங்களை கொடூரமாக அடித்து தாக்குகிறார்கள் என்று ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்திற்கு வெளியே நின்று புலம்பி இருக்கிறார்.

 அந்த சிறுமியின் தாயாரை அழைத்த போலீசார் புகாரை மாற்றி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.   புகாரை மாற்றி கொடுக்க விடவில்லை என்றால் உன் மகளை அடித்து துன்புறுத்துவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.   அந்த சிறுமியை உள்ளே அழைத்துச் சென்று அடைத்து வைத்து எட்டி உதைத்து,  பெல்ட்டால் அடித்து இருக்கிறார்கள்.   ஏற்கனவே மூன்று நாள் பாலியல் வன்கொடுமை அனுபவித்த அந்த சிறுமி மீண்டும் போலீசார் சித்திரவதையில் கொடூரமாக தாக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.

 இதன் பின்னர் அந்த தாய் உயரதிகாரிகளிடம் சென்று புகார் அளித்துள்ளார்.   அதன் பின்னர் உயர் அதிகாரிகள்  அதிரடி நடவடிக்கை எடுத்து மூன்று போலீசாரை பணி இடை நீக்கம் செய்துள்ளனர்.   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாபுகானையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.