சிறுமியை வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பரப்பிய மூன்று சிறுவர்கள்

 
si

மனநலம் சரியில்லாத சிறுவியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.   இதை பார்த்த பலரும் அந்த சிறுமியை அடையாளம் கண்டு தகவல் தெரிவித்த போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மும்பையில் காட்கோபர் பகுதியில் வசித்து வருகிறார் அந்த மனநலம் குன்றிய சிறுமி.  சம்பவத்தன்று அந்த சிறுமி கழிவறைக்குச் சென்றிருக்கிறார்.  இதை நோட்டமிட்ட மூன்று சிறுவர்கள் திடீரென்று கழிவறைக்குள்  நுழைந்து அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

jj

 அப்போது அதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.   அந்த வீடியோவை வலைத்தளத்தில் ஆர்வ மிகுதியில் பகிர்ந்திருக்கிறார்கள்.  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் சிறுமியின் சகோதரர் ஒருவரின் பார்வைக்கு சென்று இருக்கிறது.  அவர் அந்த வீடியோவை பார்த்துவிட்டு பதறிப் போய் விவரத்தை குடும்பத்தில் சொல்ல,   குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 பின்னர் காட்கோபர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர்.   புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு நேர்ந்த கொடுமையை  சொல்லி இருக்கிறார்.    இதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த மூன்று சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்துள்ளனர்.

 நீதிமன்றத்தில் அந்த மூன்று சிறுவர்களையும் ஆஜர்படுத்திய போது அவர்கள் சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.   இதை அடுத்து போலீசார் அந்த மூன்று சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.