எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது -பிரிய முடியாமல் கதறிய தோழிகள்

 
x

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வரும் இளம் பெண்ணும்,  பயோ டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இளம் பெண்ணும் தோழிகளாகி இருவரும் நெருங்கி பழக, பெற்றோர் அதை கண்டிக்க,  வீட்டை விட்டு வெளியேறி தனியே வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் . போலீஸ அவர்களை கண்டுபிடித்து அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுத்திருக்கின்றனர். அதில் ஒரு பெண் தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டு சிகிச்சையில் இருக்கிறார்.  எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது எங்களை இப்படியே விட்டு விடுங்கள்.  எங்களால் வேறு வாழ்க்கையை வாழமுடியாது என்று அந்த தோழிகள் கதறி இருக்கிறார்கள்.  இதில் ஒரு தோழி ரொம்பவே பிடிவாதமாக இருந்ததால் அவர் வீட்டிற்கு செல்ல மறுத்ததால் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்.  

க்

 தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அடுத்த ஏரியூரைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண்,  இன்ஜினியரிங் படித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.   அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் பயோ டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.  இந்த இரண்டு பெண்களும் சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்த போது ஏரியூரில் இருந்து ஒரே பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார்கள்.  அப்போது இருவரும் நெருங்கிய தோழியாளராக பழகி வந்திருக்கிறார்கள்.

 இந்த தோழிகள் ஓரினச்சேர்க்கையாளர்களாகவும் மாறி இருக்கிறார்கள் .  இந்த பழக்கம் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் கண்டித்து இருக்கிறார்கள் . இதனால் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கிறார்கள்.  உடனே பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தபோது,  கோவையில் வீடு எடுத்து வாழ்ந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.  அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு ஏரியூருக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

 இரு வீட்டின் பெற்றோரும் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.  கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக மீண்டும் தோழிகளை அழைத்து வந்து போலீசார் கவுன்சிலிங் கொடுத்திருக்கிறார்கள்.  பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் கவுன்சிலிங் நடந்திருக்கிறது. 

க்

 அப்போது பாத்ரூம் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் அந்த இன்ஜினியர்.  திடீரென்று அலறல் சத்தம் கேட்டு இருக்கிறது.  ஓடிப் போய் பார்த்ததும் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.  முன்பே திட்டமிட்டு வைத்திருந்த பிளேடால் கழுத்து கை,கால் என்று பல இடங்களில் வெட்டிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.  அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

 மருத்துவமனைகளை சிகிச்சை பெற்று வரும் அவரிடம் பென்னாகரம் குற்றவியல் உரிமை இயல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கே  தோழியை பார்க்க வந்திருக்கிறார்.  மருத்துவமனையில் தோளில் சந்தித்து கட்டியணைத்து  பேசிக் கொண்டிருந்த பின்னர்,  போலீசார்  காவல் நிலையம் அழைத்துச் சென்று,  இது சரிப்பட்டு வராது.  உங்களுக்கு என்று தனித்தனியாக வாழ்க்கை வாழ்ந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.  ஆனால் கடந்த 9 மாதங்களாக உயிராக பழகிவிட்டோம்.  எங்களை பிரித்து விடாதீர்கள்.  எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது . எங்களுக்கு வேறு ஒரு வாழ்க்கை  வேண்டாம் என்று கதறி இருக்கிறார்.  வீட்டிற்கு போக சொல்லி கவுன்சிலிங் அறிவுறுத்தவும் வீட்டிற்கு என்னால் போக முடியாது.   வேண்டுமானால் என்னை காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் என்று கதறி இருக்கிறார்.  இதை எடுத்து அந்த மாணவியை போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.