பெண் அழகாக இருந்ததால் விட்டுவிடக்கூடாது என்று 15 லட்சம் ரூபாயை கொடுத்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி

 
p

எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரவில்லை.  அதனால் நீங்கள் பதினைந்து லட்சம் ரூபாயை கொடுத்தால் திருமணத்தை முடித்து விடுகிறோம்.  திருமணத்திற்கு பின்னர் பதினைந்து நாட்களில் அந்த பணம் வந்ததும் கொடுத்து விடுகிறோம் என்று மணமகள் குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.  திருமண நெருக்கத்தில் இப்படி சொன்னதால் பெண் வேறு அழகாக இருந்ததால் விட்டுவிடக்கூடாது என்று கேட்ட தொகையை கொடுத்திருக்கிறார்கள் . ஆனால் தாலி கட்டிய மறுநாளே கணவர் பிடிக்கவில்லை என்று எஸ்கேப் ஆகி இருக்கிறார் அந்த பெண்.   விசாரணையில் அந்த பெண் மது போதைக்கு அடிமையானவர் என்றும் பல ஆண்களை இப்படி ஏமாற்றி வரும் மோசடி பேர்வழி என்றும் தெரிய வந்திருக்கிறது.

 தென்காசி மாவட்டத்தில் வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த பவித்ராவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டில் திருமண நிச்சய தார்த்தம் நடந்திருக்கிறது.   அதன் பின்னர் அந்த பெண் முத்துக்குமாரிடம் அடிக்கடி செல்போனில் பேசி காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்திருக்கிறார். 

x

திருமண நெருக்கத்தில் திடீரென்று பவித்ராவின் வீட்டார் முத்துக்குமார் வீட்டாரிடம் சென்று எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரவில்லை.  அதனால் பதினைந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசைகள் வாங்கி திருமணத்தை நடத்தி விடுகிறோம்.  திருமணத்திற்கு பின்னர் 15 நாளில் அந்த பணம் வந்ததும் கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல சொல்லி இருக்கிறார்கள்.   நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நெருக்கத்தில் இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்ததால் பெண் வேறு அழகாக இருந்ததால் இந்த சம்பந்தத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக பெண் வீட்டார் கேட்ட தொகையை கொடுத்திருக்கிறார்கள்.  அதன் பின்னர் திருமணம் நடந்திருக்கிறது.

 திருமணம் நடந்த மறு தினமே கணவருடன் முத்துக்குமாரிடம் வாழப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு பிறந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  அவர் மட்டும் தனியாக போகாமல் சீர்வரிசை பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.  இதில் முத்துக்குமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஒரே அதிர்ச்சி . சரி,  புதுப்பெண்  முரண்டு பிடிக்கிறார்.  போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்த அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி. 

 அந்த பெண் பவித்ராவிடம் பலமுறை பேசி பார்த்தும் தங்கள் வழிக்கு வரவே இல்லை.  வாழவே முடியாது என்று சொல்லி இருக்கிறார்.   அப்போதுதான் முத்துக்குமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது.   இதை அடுத்து போலீசில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்யவில்லை. அதனால்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.   நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பவித்ரா மது போதைக்கு அடிமையானவர் என்பதும் பல ஆண்களுடன் பழகி பணம் , நகையை மோசடி செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்ரா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.