’’உன் பொண்ணோட 200 ஆபாச வீடியோ இருக்கு; ஒரு வீடியோவுக்கு ரூ.25 ஆயிரம் வேணும் ’’

 
ர்

உன் பொண்ணோட ஆபாச வீடியோக்கள் 200 வீடியோக்கள் என்கிட்ட இருக்குது.  ஒரு வீடியோவுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மொத்தம் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால்  எல்லா வீடியோவையும் உன்கிட்ட கொடுத்து விடுகிறேன்.  இல்லையென்றால் ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த மாணவியின் தாயாரிடம் மிரட்டி இருக்கிறார் வாலிபர்.  அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 சென்னையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில்  காவல் நிலையத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.  அந்த  மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க வேண்டும் என்பதற்காக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்கள் பெற்றோர்.  ஆனால் மாணவி அதில் படிப்பதை தவிர அதிக நேரம் லூடோ விளையாட்டை விளையாடி வந்திருக்கிறார். 

வி

 லூடோவில் திருநின்றவூரைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி விக்னேஷ் என்பவர் அறிமுகமாகி பேசி வந்திருக்கிறார்.   இவர்கள் நட்பு வளர்ந்து வந்திருக்கிறது.  அப்போது செல்போன் எண்ணை இருவரும் பரிமாறிக்கொண்டு டெலிகிராம் ஆஃப் வழியாக பேசி வந்திருக்கிறார்கள்.  பின்னர் இருவரும்  நேரிலும் சந்தித்து பேசி  இருவரும் பின்னர் அந்த மாணவியை தன்னை காதலிக்குமாறு சொல்லி வந்திருக்கிறார் விக்னேஷ் . 

அந்த மாணவியின் வீட்டிற்கு செல்ல  வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.   அதற்கு மாணவி மறுக்கவே,   உன்னுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசியது எல்லாம் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறேன் என்று மிரட்டிருக்கிறார்.  இதை அடுத்து அந்த மாணவி,  வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்கு அழைத்திருக்கிறார். வீட்டிற்கு சென்றதும்,   வீடியோ கால் ரெக்கார்டை பார்த்து மிரட்டி மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார்.   இதன் பின்னரும் தொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி வந்து இருக்கிறார்.  

வி

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவியை கண்டுகொண்ட  தாயார் விசாரித்த போது தான் தனக்கு நடந்த பிரச்சனையை சொல்லி இருக்கிறார்.  அப்போது அந்த மாணவியின் தாயார் விக்னேஷிடம் பேசிய போது,   உன் பொண்ணோட ஆபாச வீடியோக்கள் மொத்தம் 200 வீடியோக்கள் இருக்குது.   ஒரு வீடியோவுக்கு 25 ஆயிரம் கொடுத்துடு.  மொத்தம் 50 லட்சம் கொடுத்தா   எல்லா வீடியோவையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன் .  இல்லை என்றால் உன் மகளின் ஆபாச வீடியோக்களை ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

 உடனே 50 லட்சம் ரூபாய்க்கு பணத்தை அனுப்பிவை என்று சொல்லி தனது வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பி வைத்திருக்கிறார்.   50 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டுமா என்று அதிர்ந்து போன அந்த பெண் வேறு வழியின்றி திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார்.  திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் இருந்து ஆவடி மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.   அவர்கள் விக்னேஷ் மீது போக்சோ, பெண் வன்கொடுமை  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.   பின்னர் திருவள்ளூர் மகிளா  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.