வர மறுத்ததால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபர்கள்

 
ku

உறவினர்கள் உள்பட 4 வாலிபர்கள் சேர்ந்து  திருமணமான அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்கள்.   அதற்கு அந்த பெண் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அப்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார்கள்.  ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம்.

 ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசரி பஹ் மாவட்டத்தில் கணவனுடன் வசித்து வந்துள்ளார் 23 வயதான அந்த பெண்.  கடந்த ஏழாம் தேதி இரவு அந்தப் பெண் வீட்டில் இருந்த போது அப்பெண்ணின் உறவினர்கள் மூன்று பேர் உள்பட நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார்கள்.  இதில் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவர்களின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

f

 பாலியல் பலாத்காரம் செய்ய முடியாத ஆத்திரத்தில் வெறிபிடித்த அந்த கும்பல் அந்த இளம் பெண் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார்கள்.  உடல் முழுவதும் தீ பற்றியதில் அலறி துடித்திருக்கிறார்.  அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.  70% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

 இதை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்ததில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய நடந்த முயற்சியில் நான்கு பேரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரிய வந்திருக்கிறது.  

 உயிரிழப்பதற்கு முன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்,  தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தன்னை அக்கம் பக்கத்தினர் தான் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.  ஆனால் அப்பெண்ணின் கணவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் மனைவியை தான் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாக கூறி இருக்கிறார்.   இதில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது.

 அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும்,  இந்த பெண் அந்த வாலிபருக்கு நான்காவது மனைவி என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.  அதை அடுத்து அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றார்கள்.   நான்கு பேர் மீது கூட்டி பாலியல் வன்கொடுமை  முயற்சி மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இதுவரைக்கும் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை.