தங்கை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்

 
r

 தங்கை முறை உள்ள சிறுமி குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் ஊரில் 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து  வருகிறார்.   இவர்களுக்கு தூரத்து சொந்தம் மோகன்ராஜ் .  இவர் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வந்திருக்கிறார் .  சிறுமிக்கு அண்ணன் முறை வேண்டும் என்பதால் மோகன்ராஜ் சிறுமி வீட்டுக்கு வருவதை  யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

o

 ஒரு நாள் சிறுமி குளிக்கும்போது அவருக்கு தெரியாமல் செல்போனில்  வீடியோ எடுத்து இருக்கிறார்.   அந்த வீடியோவை சிறுமியிடம் காட்டியிருக்கிறார்.  இந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.   தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் இந்த வீடியோவை  வெளியிட்டு விடுவேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார் மோகன்ராஜ் .

இதன்பின்னர் மோகன்ராஜின் தாய், தந்தை ஆகியோரும் சிறுமியை மிரட்டி இருக்கிறார்கள்.  அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.   இதனால் மனமுடைந்த அந்த சிறுமி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.    கடந்த ஏப்ரவரி 28ஆம் தேதி அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் .  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து   கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.   அவர் அளித்த புகாரின் அடிப்படையில்  மோகன்ராஜ்,  அவரது தந்தை தனிக்கொடி,  தாய் சாந்தி,  தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

போக்சோ சட்டத்தில் மோகன்ராஜ்  கைது செய்யப்பட்டிருக்கிறார்.   தலைமுறைவாக இருக்கும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.