பர்த் டே கேக் கேட்ட வாலிபர் திடீர்னு கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி

 
v

 பர்த் டே கேக் வேண்டும் என்று சொல்லி இளம்பெண்ணிடம் பேசிக்கொண்டே திடீரென்று அவரை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பிடித்து கொடுத்துள்ளனர் அக்கம்பக்கத்தினர். 

 கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ராஜ்குமார்(42).  கூலித்தொழிலாளியான இவர்  அப்பகுதியில் இருக்கும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று இருக்கிறார். அங்கு இளம்பெண் ஒருவர் வேலையில் இருந்ததை கண்டு , அவர் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்.  

h

 அந்த கடைக்குள் வேறு யாரும் இல்லை அதை தெரிந்து கொண்ட ராஜ்குமார்,  அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு,  இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார். 

 பர்த் டே கேக் வேண்டும் என்று ராஜ்குமார் கேட்க,  அந்தப் பெண் பர்த்டே கேக் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   அப்போது திடீரென்று அப்பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்.  இதில் அதிர்ந்துபோன அப்பெண் போட்ட கூச்சலில் அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடிவந்து ராஜ்குமாரை பிடித்துவிட்டனர் . 

பின்னர் அவரை சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.   இது பாலியல் பலாத்கார வழக்கு என்பதால் ,  கோவை மாநகர மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.   அதன்பின்னர் மகளிர் போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.