பக்கத்து வீட்டு பெண்ணை பார்த்ததும் நிர்வாணமாக நின்ற வாலிபர்

 
z


 பக்கத்து வீட்டு பெண்ணை பார்த்து நிர்வாணமாக நின்று இருக்கிறார் வாலிபர் . இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் சின்ன பள்ளிபாளையம் பகுதியினைச் சேர்ந்தவர் சுரேஷ் .  33 வயதான அந்த நபர் ஜேசிபி ஆபரேட்டராக இருந்து வருகிறார்.  இவரது வீட்டிற்கு அருகாமையில் வசித்து வந்த 38 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து  வந்திருக்கிறது .

m

இந்த நிலையில் அந்த பெண் தனது வீட்டில் சமையல் அறையில் நின்று கொண்டு சமையல் வேலைகளில் ஈடுபட்டு இருந்துள்ளார்.   அப்போது எதிர் வீட்டில் இருந்த சுவிசன் அந்தப் பெண் பார்க்கும் படியாக தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நின்று இருக்கிறார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பக்கத்து வீட்டு வாலிபர் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார் என்று காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு புகார் கொடுத்திருக்கிறார்.  இந்த பெண்மணி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுவிசனை கைது செய்து இருக்கிறார்கள்.