காதலியுடன் வீடியோ காலில் பேசியபடியே தீக்குளித்த இளைஞர்

 
f

காதலியுடன் வீடியோ காலில் பேசியபடியே தீக்குளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இளைஞர்.   மும்பையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

மும்பையில் சாந்தாகுருஸ் பகுதியைச் சேர்ந்தவர் சாகர் ஜாதவ்(19).   நேற்று இவர் வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கணபதி மண்டலுக்கு சென்றிருக்கிறார்.  பின்னர் தன் காதலிக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்து தரிசனத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.  அதற்கு காதலி மறுத்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   கணபதி மண்டலுக்கு வரவில்லை என்றால் நான் இங்கேயே இப்போதே தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.  அதற்கு காதலி,  உன்  நாடகத்தை நான் நம்ப தயாராக இல்லை என்று அலட்சியப்படுத்தி இருக்கிறார்.  

fi

உடனே சாகர் ஜாதவ், திடீரென்று தீக்குச்சியை கிழித்து தனது ஆடையின் மேல் பற்ற வைத்திருக்கிறார்.   காட்டன் ஆடையில்  தீ பிடித்து மள மள வென்று எரிந்ததும் கதறி இருக்கிறார். இதை  வீடியோ காலில் லைவ்வாக பார்த்த காதலி கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

கதறல் சத்தம் கேட்டதும் ஓடிவந்த சாகர் ஜாதவின் பெற்றோர், மகனின் உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.   மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.  30 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  

வக்கோலோ போலீசாருக்கு இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்கள் மருத்துவமனை சென்ரு சாகர் ஜாதவிடம் விசாரணை நடத்தியதில் தான் தீக்குளித்ததற்கு யாரும் காரணம் இல்லை என்று சொன்னாலும், போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.