பைக் ஓட்ட கற்றுத்தருகிறேன் என்ற சாக்கில் மாணவியிடம் ஆசிரியர் செய்த வேலை

 
பி

 பைக் ஓட்ட கற்று தருகிறேன் என்று சொல்லி மாணவியை அழைத்து சென்று யாரும் இல்லாத இடத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.   மாணவியிடம் காதலிப்பதாக சொல்லி பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞரும் போக்சோவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பொ

 நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை அடுத்த வி. எம். சத்திரம்.    இந்த பகுதியில் தாய், தந்தை இல்லாத சிறுமி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.    தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவியை கேடிசி நகரைச் சேர்ந்த பொன் கணேஷ் என்ற 20 வயது இளைஞர் காதலிப்பதாக சொல்லி பின் தொடர்ந்து வந்து இருக்கிறார் .

சிறுமி ஒரு கட்டத்தில் அவரை காதலிப்பதாக சொல்ல,   சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி நெருங்கிப் பழகி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.   விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சிறுமியை மிரட்டி ,  கட்டாயப்படுத்தவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் சிறுமியின் பள்ளியில் பாட்டு ஆசிரியராக இருக்கும் அருள்ராஜ் ஜோசப் சிறுமியிடம் நெருங்கி பழகி வந்திருக்கிறார் .  பைக் ஓட்ட  கற்றுத்தருகிறேன் என்று சொல்ல ,  ஆசிரியர் நமக்கு உண்மையிலேயே பைக் ஓட்ட கற்று தரப்போகிறார் என்ற ஆவலுடன் அவருடன் செல்ல,  ரெட்டியார்பட்டி இரட்டைமலை அருகே சென்றதும் அங்கு யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

ரு

 ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை காதலனிடம் சொல்ல அவர் ஆசிரியரை தட்டிக் கேட்டு மிரட்டி இருக்கிறார்.   இதை வெளியே வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். 

 மாணவிக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார் .  இது சிறுமியின் பாட்டிக்கு சந்தேகத்தை கொடுத்திருக்கிறது. உடனே அவர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  

 அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் தான் பொன் கணேஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தும்,   ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததையும் சொல்லியிருக்கிறார்.  இதையடுத்து பொன் கணேஷ்,   ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.