முதலிரவில் கணவர் ஆண்மையற்றவர் என அறிந்த பெண்! கிருஷ்ணா நதியில் அமர்ந்து தர்ணா போராட்டம்

 
k

முதலிரவில் கணவர் ஆண்மையற்றவர் என்பது தெரியவந்ததும் புதுப்பெண் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் . அதன் பின்னரும் கணவருடன் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து இருந்தாலும் தாழ்வு மனப்பான்மையால் கணவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்ததால் மாமியாரும் அதற்கு உடந்தையாக இருந்ததால் நதிக்கரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் . ஆந்திர மாநிலத்தில்  நடந்து இருக்கிறது இந்த சம்பவம்.

ஆந்திராவில்  கிருஷ்ணா மாவட்டம் சந்திரலபாடு மண்டலத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமர்ந்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  பேனர் கட்டிக்கொண்டு அவர் குடும்ப உறுப்பினர்களுடன்  நடத்திய போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ri

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது.  முதலிரவில் கணவர் ஆண்மையற்றவர் என்று அறிந்ததும் அதிர்ந்து போயிருக்கிறார்.  இதைப்பற்றி மறுநாள் மாமியாரிடம் சொன்னபோது,  இதை வெளியே சொன்னால் மானம் போய்விடும் என்று கெஞ்சி கேட்டிருக்கிறார்.  அதனால் வேறு வழியின்றி கணவரை அனுசரித்துக்கொண்டு வாழ்ந்து வ்ந்திருக்கிறார்.

ஆனால், கணவரோ,  தாழ்வு மனப்பான்மையினால்  மனைவியை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்திருக்கிறார்.  இதற்கு மாமியாரும் உடந்தையாக இருந்துள்ளார்.  

இதனால் அந்த பெண் விவாகரத்து கேட்க,  ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அவருக்கு ரூ.15 லட்சம் தருவதாக உறவினர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், பஞ்சாயத்தில் பேசியபடி பணம் கொடுக்காமல் நீதிமன்றத்திற்கு சென்று தங்களுக்கு பிரச்சனை செய்கிறார்கள், அவதூறாக பேசுகிறார்கள் என்று அந்த பெண் நீதி கேட்டு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளார்.

மாமியார் வீட்டு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினால் உடனே போராட்டத்தை தடுத்துவிடுவார்கள்.  போலீசை வரவழைத்து கைது செய்துவிடுவார்கள் என்று நூதன போராட்த்தை கையில் எடுத்திருக்கிறார்.   அதன்படி, கிருஷ்ணா நதிக்கரையில் அமர்ந்து பேனர் கட்டி தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார்.  அப்பெண்ணுக்கு ஆதரவாக அவரது குடும்ப உறுப்பினர்களும் அப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.